மனிதாபிமான உதவிப் பொருட்கள் காசா எல்லையை அடைந்தது!


எகிப்தின் ஊடாக தெற்கு காசாவின் ரஃபா எல்லையை கடக்கும் பகுதிக்கு இன்று காலை மனிதாபிமான உதவிப் பொருட்களை தாங்கிய லொறிகள் அடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 


கடந்த வௌ்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸூக்கு இடையில் இடம்பெற்று வந்த போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், 13.10.2025 காசா அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. 


இந்நிலையில் மனிதாபிமான உதவிப் பொருட்களை தாங்கிய பெரும்பாலான லொறிகள் அந்த எல்லைப் பகுதியில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 


எனினும் சில லொறிகள் மாத்திரமே காசாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய லொறிகள் எல்லையிலேயே தரித்து நிற்பதாக கூறப்படுகின்றது. 


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எகிப்திய ஜனாதிபதி அப்துல் ஃபத்தா அல்-சிசியுடன் இணைந்து திங்கட்கிழமை எகிப்தில் நடைபெறும் சர்வதேச அமைதி உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்கவுள்ளார். 


“காசா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை முயற்சிகளை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு என்பனவற்றுக்கான புதிய அத்தியாயத்தை உருவாக்கவுள்ளதாக எகிப்திய ஜனாதிபதி ​பேச்சாளர் தெரிவித்தார். 


அதேநேரம் நாளை நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட அரச தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.