‘நீதி வெல்லும்’


வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 பேர் படுகாமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு, அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. சென்னை உய ர்நீதிமன்றத்தில் அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

செப்.30-ம் தேதியன்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் கரூர் சம்பவத்தில் சதி இருப்பதாகக் கூறியதோடு, தனது தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று முதல்வரை சுட்டிக்காட்டி பேசியிருந்தார். தற்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ள நிலையில் ‘நீதி வெல்லும்’ என்று  ட்வீட் செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.