கைவிடப்பட்ட காணிகளால் டெங்குப் பரவல் அபாயம்
யாழ். மாவட்டத்தில் ஏராளமான காணிகள் உரி மையாளரால் பராமரிப்பு இன்றி கைவிடப்பட்ட நிலையில் குறித்த காணிகள் பற்றை மண்டி காணப் படுகின்றன.
இவ்வாறான காணிகளுக்குள் அயலில் உள்ள பொதுமக்கள் திண்மக்கழிவுகளை வீசுவதை அவதானிக்க முடிகின்றது. இவற்றால் டெங்கு ஆபத்து அதிகரிக்கு அபாயம் காணப்படுவதால் மாந கரசபை, நகரசபைகள், பிரதேச சபைகள் குறித்த கைவிடப்பட்ட காணிகள் தொடர்பில் நடவடிக்கை யினை மேற்கொள்ள முன்வரவேண்டும்.
குறித்த காணிகள் டெங்கு கொசுக்கள் இனப் பெருக்கம் செய்வதற்கு ஏற்ற இடங்களாக மாறி யுள்ளன. தேவையற்ற பொருட்கள், குப்பைகள் மற்றும் நீர் தேங்கும் பொருட்கள் என்பன இக் காணிகளில் வீசப்படுவதால் டெங்கு நுளம்புகள் பெருகும் சூழல் காணப்படுகின்றன.
டெங்கு பரவலைத் தடுக்க கைவிடப்பட்ட காணி களைச் சுத்தப்படுத்தி, கொசுக்கள் பெருகாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
கைவிடப்பட்ட பல காணிகளில் தேங்கியுள்ள மழைநீர், பழைய டயர்கள், காலியான கொள்கலன் கள் மற்றும் பிற தேவையற்ற பொருட்கள் டெங்கு கொசுக்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய வழிகோலுகின்றன.
இவ்வாறு பராமரிக்கப்படாமல் இருக்கும் காணி களுக்கு தற்போது சிவப்பு அறிவித்தல்கள் ஒட் டப்படுவதோடு உள்ளூராட்சி சபைகளின் நடவ டிக்கைகள் முடிந்து விடுகின்றன. மேலதிக நட வடிக்கைகள் இன்மையால் உரிமையாளர்களும் அதுகுறித்து அக்கறையற்றவர்களாக இருக்கின் றனர். இது டெங்கு நோயின் பரவலை அதிகரிக்க வழிவகுக்கிறது.
கைவிடப்பட்ட காணிகளை உள்ளூராட்சி அமைப்புக்கள் பொறுப்பேற்று சுத்தப்படுத்துவது டன் தேவையற்ற பொருட்களை அகற்றுதல், குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துதல், தேங் கியிருக்கும் நீரை அகற்றுதல் போன்ற செயற்பாடு களை மேற்கொண்டு அவற்றுக்கான செலவீனங் களை உரிமையாளர்களிடமிருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பது டெங்குப் பரம்பலை கட்டுப் படுத்த வழிசமைக்கும்.
சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டும் உரிமை கோரப்படாத காணிகளை உள்ளூராட்சி சபைகள் சட்டரீதியாக சபை உடைமையாக்கும் நடவடிக் கைகள் முன்னெடுப்பதன் மூலம் இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும். மழைகாலம் ஆரம்பித்துள்ள நிலையில் டெங்கின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு எதிர்வுகூறப்பட் டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் சமூகப்பொறுப்பு டன் கைவிடப்பட்ட காணிகளில் கழிவுகளை போடு வதை தவிர்த்து சூழலை சுத்தமாக வைத்திருப்ப தன் மூலம் தம்மையும் தாம் சார்ந்த சமூகத்தையும் டெங்கிலிருந்து பாதுகாக்க முடியும். (ச-ஜெ)

.jpeg
)





கருத்துகள் இல்லை