சீனக்குடா விமானப் படைத் தளத்தில் நடைபெற்ற ஜனாதிபதி வர்ண விருது வழங்கல்!📸


இலங்கை விமானப்படைக்கு ஜனாதிபதி வர்ண விருது வழங்கல் மற்றும் கெடட் அதிகாரிகளை விமானப்படை அதிகாரிகளாக நியமிப்பது தொடர்பில் இன்று (18) காலை சீனக்குடா விமானப் படைக் கல்விப்பீடத்தில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார்.


இங்கு கருத்துரைத்த ஜனாதிபதி அவர்கள் மிகவும் மதிப்புமிக்க, மரியாதைக்குரிய மற்றும் மிகவும் தொழில்முறையுடன் மற்றும் திறமையான படையில் இணைந்திருக்கிறார்கள் என்பதையும், அந்த நற்பெயரையும் கௌரவத்தையும் தொடர்ந்து பாதுகாப்பதற்கும், தாய்நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அவர்களுக்கு உயர்ந்த பொறுப்பு உள்ளது என்பதையும் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவூட்டினார் இன்று பதவியேற்ற அனைத்து புதிய அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் ஜனாதிபதி தெரிவித்துக் கொண்டார்


ஒவ்வொரு தொழிலுடனும் தொழில்முறை பண்பு, திறன் மற்றும் அதனுடன் தொடர்புள்ள ஒழுக்காற்று மற்றும் பொறுப்பு முறையாக நிறைவேற்றும் ஒரு அரச சேவை நாட்டிற்குத் தேவை என்பதையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார் அந்த விடயத்தில் இலங்கை விமானப்படை ஆற்றிய பங்களிப்பை இங்கு ஜனாதிபதி பாராட்டினார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.