புலம்பெயர் இலங்கையர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணம் அதிகரிப்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான கட்டணத்தை ரூ. 2,000 இலிருந்து ரூ. 15,000 ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இந்த முடிவை உறுதிப்படுத்தினார். போக்குவரத்து அமைச்சகத்துடன் கலந்தாலோசித்த பின்னர் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், இருப்பினும், கட்டணம் தற்போது அமெரிக்க டொலரில் குறிப்பிடப்பட்டுள்ளதால், அதை ரூபாயாக மாற்றிய பின்னர் அடுத்த வாரம் மீண்டும் வர்த்தமானி வெளியிடப்படும் என்றும் அவர் விளக்கினார்.
இந்த வசதி இனிமேல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமன்றி, பல ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பும் சுமார் 3.5 மில்லியன் புலம்பெயர் இலங்கையர்களுக்கும், தூதரகப் பணியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் வரும் ஊழியர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். தற்போது பெறப்படும் ரூ. 2,000 கட்டணம் போதுமானதாக இல்லாததாலேயே இந்தக் கட்டண அதிகரிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#tamilarul #tamilnews #tamilshorts #news #tamil #tamilarulnet #camera #Tamilarulmedia #TamilArulTV #website #socialmedia #Jaffna #srilanka #drivinglicense #diaspora #tourist #srilankatravel

.jpeg
)





கருத்துகள் இல்லை