எல்லாளன் நடவடிக்கையில் ஒரு உன்னதமான வரிகள்!
பெடியள் வெளிக்கிட்டிட்டாங்களா?
“இல்லையண்ணை இனித்தான்…” “அப்பிடியெண்டா அவங்களிட்டச் சொல்லுங்கோ கடைசியா முகாமுக்குள்ள இயங்கேக்கையும் பொக்கற்றில சொக்கிலேற்றுகளைக் கொண்டுபோகச் சொல்லுங்கோ.
இவங்கள் கடைசி நேரம் விட்டிட்டுப் போயிடுவாங்கள் பிறகு நீண்டநேரம் சண்டை பிடிச்சா களைச்சிடுவாங்கள் ஆனபடியா மறக்காம கொண்டுபோகச் சொல்லுங்கோ.”
சாகப்போறாங்கனு தெரிஞ்சும் பசியோட இருக்ககூடாத எண்டு சொன்ன வார்த்தையிலதான் அவர ஒப்பற்ற தலைவன் என்கிறோம்.
அண்ணை தேசிய கொடியைக் கொண்டு போகட்டுமா?
“நீங்கள் கொண்டுபோகலாம் அதுக்குத் தடையில்லை ஏனெண்டா இது முற்று முழுதான இராணுவத் தளம் நீங்கள் உங்கட உச்ச வீரத்தை காட்டுங்கோ ஆனால் ஆரும் அதிகாரியளின்ர பிள்ளையள் மனைவிகள் சிலநேரம் அங்க நிக்கக்கூடும் தாக்குதல் நடத்தேக்குள்ள அவைய பத்திரமா அகற்றி அவையளுக்கு ஒன்றும் நடக்காம பார்த்துக்கொள்ளுங்கோ உங்களுக்கு உயிர் ஆபத்து வந்தாலும் பரவாயில்லை அவர்கள் மீது தாக்குதல் நடத்தாதிங்கோ"
இப்பேற்பட்ட ஒருவனைத்தான் இந்த உலகம் தீவிரவாதி பயங்கரவாதி என்றது.
நீங்களே சொல்லுங்கள் உலக வரலாற்றில் எங்களுக்கு கிடைத்த தலைவன் போல வேறு எந்த இனத்திற்காவது கிடைத்திருப்பானா?
அந்த ஒப்பற்ற வீரனை இழந்து நிற்கிறது இந்த இனம்

.jpeg
)





கருத்துகள் இல்லை