வெலிகம லசா கொலையின் பின்னணியில் துபாய் தாதா 'ரொட்டும்பா அமில'!


வெலிகம லசா கொலையின் பின்னணியில் துபாய் தாதா 'ரொட்டும்பா அமில' தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.துபாய் தாதா என பொலிஸ் விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியானது.


வெலிகம பிரதேச சபைத் தலைவரும், சமகி ஜன பலவேகய (SJB) உறுப்பினருமான லசந்த விக்ரமசேகர ('மிதிகம லசா') சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், மற்றுமொரு பிரபல பாதாள உலகத் தலைவனின் பெயர் அடிபடுவதாகப் பொலிஸ் விசாரணைகள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.


வெலிகம லசாவின் கொலையைச் செய்ய கூலிப்படைகளை ஏவியது, 'ரொட்டும்பா அமில' என அறியப்படும் பாதாள உலகக் குழுத் தலைவன் என ஊடகங்கள் பொலிஸாரை மேற்கோள் காட்டிச் செய்தி வெளியிட்டுள்ளன.


துபாயில் பதுங்கியுள்ள அமில


சந்தேகநபர்களில் ஒருவரான ரொட்டும்பா அமில தற்போது டுபாயைத் தளமாகக் கொண்டு தலைமறைவாகச் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் (அக்டோபர் 22) லசந்த விக்ரமசேகர, வெலிகம பிரதேச சபை அலுவலக அறையில் வைத்து அடையாளம் தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.


விரோதமே கொலையின் காரணமா?


இக்கொலையின் பின்னணி தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பொலிஸ் விசாரணையில் தற்போது அம்பலமாகியுள்ள தகவல்களின்படி, ரொட்டும்பா அமில, கொல்லப்பட்ட லசந்த விக்ரமசேகர ('வெலிகம லசா') மற்றும் பாதாள உலகத் தலைவன் 'ஹரக் கட்டா' ஆகிய மூவரும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.


எனினும், பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் விரோதம் காரணமாக, அமில இவர்களிருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த விரோதத்தின் உச்சகட்டமாகவே லசா சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


பொலிஸ் தரப்புகள், டுபாயில் தலைமறைவாக உள்ள ரொட்டும்பா அமிலவை இலங்கைக்குக் கொண்டுவருவது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கொலையாளிகளை அடையாளம் காணும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.