போதைப்பொருள் வியாபாரிகளே சரணடையுங்கள்!📸


போதைப்பொருள் வியாபாரிகள் அனைவரும் உடனடியாக சரணடைய வேண்டும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (30) அழைப்பு விடுத்தார்.


சமூக ஸ்திரத்தன்மைக்காக போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிக்க வேண்டும் என்றும், அதற்காகத் தானும் அரசாங்கமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 


போதைப்பொருள் அச்சுறுத்தலை தோற்கடிப்பதற்கான "'முழு நாடுமே ஒன்றாக'" தேசிய பிரச்சார திட்டத்தை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று (30) தொடங்கி வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.


இளம் தலைமுறையினர் போதைப்பொருள் அச்சுறுத்தலின் மிகப்பெரிய இரையாகிவிட்டனர் என்றும், இந்த மாயாஜாலச் சூறாவளி கிராமங்கள் மற்றும் நகரங்களில் இப்போது பரவி வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.