வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்!
வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சாமந்த விஜயசேகர அவர்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்டு வந்த சாமந்த விஜயசேகர அவர்கள் மேல் மாகாணத்தின் தெற்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக தேசிய பொலிஸ் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அவரது இடமாற்றத்தால் ஏற்பட்டுள்ள வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வெற்றிடத்திற்கு போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியாக செயற்பட்டு வந்த பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க கப்பு கொட்டுவ நியமிக்கப்பட்டுள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை