தமிழ்நாட்டில் தெலுங்கு படங்களுக்கு வரவேப்பில்லை!

 


தெலுங்கு நடிகர் கிரண் அப்பாவரம், சமீபத்திய பேட்டியில் தமிழ்-தெலுங்கு சினிமா உறவுகளைப் பற்றி உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். தெலுங்கு பார்வையாளர்கள் தமிழ் படங்களுக்கு அளிக்கும் உற்சாக வரவேற்பை அவர் பாராட்டினார். ஆனால், தமிழ்நாட்டில் தெலுங்கு படங்களுக்கு அதே அளவு ஈர்ப்பு இல்லை என்று வருத்தம் தெரிவித்தார். இது இரு மொழி சினிமாக்களின் பரஸ்பரம் புரிதலை வலியுறுத்தும் குரலாக அமைந்துள்ளது.


கிரண் அப்பாவரம் கூறியது போல், தெலுங்கில் பிரதீப் ரங்கநாதனின் படங்கள் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. அதேபோல், அவரது “K Ramp” படத்தை தமிழில் வெளியிட விரும்பியபோதும், தீபாவளி பண்டிகை சமயம் தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று சற்று வேதனைப்படுகிறார். தமிழ்நாட்டில் தெலுங்கு நடிகர்களும் தமிழ் நடிகர்களைப் போல் விரும்பப்பட வேண்டும் என்பதே அவரது ஆசை.


பேட்டியில் அவர் பேசுகையில் ” என்னுடைய ஊரில் தமிழ் நடிகர்கள் விரும்பப்படுவது போல், நம்மை இங்கு ஏற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை” என்று உருகினார். இந்த வருத்தத்திற்கு மத்தியில், தமிழ்-தெலுங்கு இணைப்பின் நல்ல உதாரணமாக பிரதீப் ரங்கநாதனின் படங்கள் உள்ளன.


சினிமா ரசிகர்கள் இதைப் பற்றி சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். இதற்கிடையே, கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான “டியூட்” படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படம், காதல்-காமெடி அம்சங்களுடன் ரசிகர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.