அறிமுகம் இல்லாதவர்கள் வீட்டுக்கு வந்தால் உடன் பொலிசாருடன் தொடர்பு கொள்ளுங்கள்!

பொலீஸ் திணைக்களம் அறிவுரை பிரதேச பொலிஸ் நிலைய


பொறுப்பதிகாரியின் அல்லது பெயர் குறிப்பிடப்படும் பொலிஸ் உத்தியோகத்தரின்தொலைபேசி இலக்கத்தை கைவசம் வைத்திருங்கள். 


உங்கள் வீட்டுக்கு அறிமுகம் இல்லாத , பொலிஸ் சீருடை அணியாதவர்கள்

வருகை தந்தால் உங்கள் வீட்டுக்கதவை

திறக்க வேண்டிய அவசியம் இல்லை


உடனடியாக வந்தவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள் பொலீஸ் அதிகாரியின் உத்தியோக

அடையாள அட்டையை அடையாளம் காணும் உரிமை உங்களுக்குண்டு அதிலும் சந்தேகமிருந்தால் உங்கள் பிரிவிலுள்ள பொலிஸ் நிலையம்

அல்லது பொலிஸ் உத்தியோகத்தரின்

இலக்கத்துக்கு தொடர்புகொண்டு வந்தவர்கள்

பற்றிய சந்தேகத்தை

நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.


தற்போது நாட்டின் சில இடங்களில் பொலிஸ் வேடம் தரித்த குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்களின் பயங்கரவாத செயற்பாடுகள்

அதிகரித்து வருவது அனைவரும் அறிந்த விடயங்களாகும்.


உங்களை விசாரணை செய்வதாக அல்லது கைது செய்வதாக கூறி கொலை கொள்ளை பயங்கரவாத செயல்பாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருபவர்களில் இருந்து

பொது மக்களை பாதுகாக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதால் போலீஸ் திணைக்களத்தின் மேற்படி அறிவுரைகளைக் கடைப் பிடிக்குமாறு பொலீஸ் திணைக்கள ஊடகப் பேச்சாளர் FU வூட்லர் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளார்..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.