எங்கள் நாட்டு சம்பள விடயத்தில் தலையிடாதே!
"எங்கள் நாட்டு சம்பள விடயத்தில் தலையிடாதே!" - ஐரோப்பிய யூனியனுடன் மோதிய டென்மார்க்! வழக்கில் மரண அடி
ஐரோப்பா முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை (Minimum Wage) நிர்ணயிக்கும் போராட்டத்தில், ஐரோப்பிய ஒன்றிய (EU) உச்ச நீதிமன்றம் ஒரு அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
"அனைத்து 27 உறுப்பு நாடுகளும் தங்கள் தொழிலாளர்களுக்கு 'போதுமான' குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும்" என்று ஐரோப்பிய ஒன்றியம் 2022-ல் ஒரு சட்டத்தை (Directive) இயற்றியது.
ஆனால், இதை எதிர்த்து டென்மார்க் போர்க்கொடி தூக்கியது.
டென்மார்க் (மற்றும் அதற்கு ஆதரவாக ஸ்வீடன்) உடனடியாக ஐரோப்பிய ஒன்றிய உச்ச நீதிமன்றத்தில் (CJUE) வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கின் வாதம் இதுதான்: "சம்பளத்தை நிர்ணயிப்பது என்பது அந்தந்த நாட்டில் உள்ள தொழிலாளர் சங்கங்களும் (Unions) முதலாளிகளும் பேசித் தீர்க்க வேண்டிய விஷயம் (collective bargaining). இது எங்கள் உள்நாட்டு உரிமை. இதில் ஐரோப்பிய யூனியன் தலையிடுவது அதன் அதிகார வரம்பு மீறல். எனவே இந்தச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்."
இந்தப் பரபரப்பான வழக்கில், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இன்று (நவம்பர் 11) தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது.டென்மார்க்கின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது!
ஐரோப்பிய ஒன்றியம்இயற்றிய இந்தக் குறைந்தபட்ச ஊதியச் சட்டம் செல்லும் என்று நீதிமன்றம் உறுதி செய்தது. "இந்தச் சட்டம், தொழிலாளர் சங்கங்களின் கூட்டுப் பேர உரிமையில் நேரடியாகத் தலையிடவில்லை" என்று கூறி, டென்மார்க்கின் முக்கிய வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.
இந்தத் தீர்ப்புக்கு ஐரோப்பா முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இது தொடர்பாக ஐரோப்பிய சோசலிஸ்ட் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒரு முக்கிய புள்ளி உள்ளது: "இதுவரை 27 நாடுகளில் வெறும் 8 நாடுகள் மட்டுமே இந்தச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு, மற்ற நாடுகள் தாமதம் செய்வதற்கு இனி எந்தச் சாக்குப்போக்கும் சொல்ல முடியாது!"என்பதே அதுவாகும்.
ஐரோப்பாவில் தற்போது குறைந்தபட்ச மாதாந்திர சம்பளம் பல்கேரியாவில் €551 என்பதில் தொடங்கி, லக்சம்பர்க்கில் €2,638 வரை இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடைவெளியைக் குறைப்பதே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

.jpeg
)





கருத்துகள் இல்லை