உருளைக்கிழங்கு விவசாயிகள் தொடர்பில் கலந்துரையாடல்!

 


முதல் 300 வரையிலான விலைக்கு கொள்வனவு செய்வதற்கும், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு விதிக்கப்படும் வரியை அதிகரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். 


விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்று கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த தெரிவித்ததுடன், உருளைக்கிழங்கு உற்பத்திச் செலவைக் குறைப்பதற்காக தரமான உரங்கள் மற்றும் விவசாய உள்ளீடுகளைத் தயாரிப்பதற்கும், உயர்தர விதைகளை உற்பத்தி செய்வதற்கும் விவசாயிகளுடன் இணைந்து கமத்தொழில் திணைக்களத்தின் கீழ் எதிர்காலத்தில் செயற்திட்டம் ஒன்று தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 


உருளைக்கிழங்கு விவசாயிகளுக்குத் தேவையான அரசாங்க தலையீடுகளை நெறிப்படுத்த விவசாயிகள் பதிவுத் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும், விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்டகால தீர்வுகளை வழங்கி, அந்தப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கே.டீ. லால்காந்த மேலும் தெரிவித்தார். 


நாட்டின் வருடாந்த உருளைக்கிழங்கு நுகர்வு சுமார் 225,000 மெட்ரிக் டன்கள் என்றும், அதில் சுமார் 70,000 முதல் 80,000 மெட்ரிக் டன்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றும், அதன்படி எஞ்சிய தொகையை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது என்றும் கமத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் புள்ளிவிவரத் தரவுகளுடன் சுட்டிக்காட்டினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.