இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கைக்கு அளித்து வரும் ஆதரவு!

 


இலங்கையின் பாதுகாப்புப் படையினருக் இந்தியாவும் அமெரிக்காவும் அளித்து வரும் ஆதரவு குறித்து ஜனாதிபதி பாராளுமன்றில் தனது உரையில் தெரிவித்தார். 


இதன்போது இந்தியா 70 ஜீப்புகளையும் பல்வேறு தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கியுள்ளது, மேலும் ஆயுதப்படைகளின் திறன் நிலைகளை மேம்படுத்த ஒரு தொழில்நுட்ப அக்கடமியை நிறுவுவதற்கு ஆதரவளிக்க முன்மொழிந்துள்ளது.


2026 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 10 TH-57 உலங்குவானூர்திகளை பரிசாக வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது. கூடுதலாக, அமெரிக்காவும் அவுஸ்ரேலியாவும் 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் இலங்கை விமானப்படைக்கு இரண்டு C-130 விமானங்களை அன்பளிப்பாக வழங்கும்.


அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியாவால் ஏற்கனவே KA-360 மற்றும் KA-350 பீச் கிராஃப்ட் விமானங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் கூறினார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.