வெளிநாட்டு வேலை மோசடி – இருவர் கைது!


கனடா, சைப்ரஸ் மற்றும் சுவிட்சர்லாந்து வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி மக்களிடம் இலட்சக்கணக்கில் பணம் பறித்த இரு பேரை SLBFE விசேட விசாரணைப் பிரிவு கைது செய்துள்ளது. 

 ஓய்வுபெற்ற தோட்ட முகாமையாளர் – 52 இலட்ச மோசடி காலி மற்றும் நிக்கவெரட்டிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு பேரிடம்

“கனடா பண்ணை வேலை” கிடைக்கச் செய்வதாகக் கூறி தலா 13 இலட்சம் ரூபாய் பெற்ற ஓய்வுபெற்ற தோட்ட முகாமையாளர் ஒருவர் வரக்காபொல – அம்பகலகந்த பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டார். அவரின் வீட்டில் இருந்து சைப்ரஸ் வேலை ஒப்பந்தம் என்ற பெயரில் தலா 75,000 ரூபாய்க்கு வழங்கப்பட்ட மூன்று போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

தனியார் வைத்தியசாலை ஊழியர் – 17 இலட்ச மோசடி 

வஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சுவிட்சர்லாந்து வேலை” தருவதாகக் கூறி களுத்துறை நபரிடமிருந்து 17 இலட்சம் ரூபாய் பெற்றார்.

வேலை வழங்காமல் மறைவாக இருந்த அவர் கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்தபோது விசாரணை அதிகாரிகள் சென்று கைது செய்தனர்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.