பொலிஸ் மா அதிபரிடம் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோரிக்கை!


நாட்டில் சட்டம் ஒழுங்கு எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் பொதுமக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்தனர்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில், நேற்று (31) காலை பொலிஸ் மா அதிபரை பாராளுமன்றத்திற்கு அழைத்தபோதே இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை நீக்கியது அரசாங்கத்தின் கொள்கை தீர்மானத்தின் அடிப்படையிலாகும் என்று இங்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

இங்கு கருத்துக்களை வெளிப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பை நீக்குவது அரசியல் ரீதியான தீர்மானமாக இருந்தால், மக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பை வழங்கும் பொறுப்பு சபாநாயகருக்கு பாராப்படுத்தப்படுகிறது.

ஆகையால், உடனே, சகல மக்கள் பிரதிநிதிகளுக்கும் பாதுகாப்பைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளை பொலிஸ் மா அதிபருக்கு வழங்குவது சபாநாயகரால் பிறப்பிக்க வேண்டும் என்று உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர்களது பாதுகாப்பு நிலைமை குறித்து மதிப்பீடு செய்து, அறிக்கை தயாரிக்கப்படும் என்ற முந்தைய கருத்து குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு கேள்வி எழுப்பியதோடு, இந்த மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்றும், பொது மக்களுக்காக ஆற்ற வேண்டிய சேவைகளை ஆற்றும் போது மக்கள் பிரதிநிதிகளுக்கு எழுந்துள்ள பாதுகாப்பு சவால்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வது முக்கியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.


மேலும், தற்போது சவாலுக்கு உள்ளாகியுள்ள உள்ளூராட்சி மன்ற கூட்டங்கள் மற்றும் பொது மக்கள் தினங்களை நடத்தத் தேவையான பாதுகாப்பைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.


 


இச்சந்திப்பில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக ஆகியோருடன் ரஞ்சித் மத்தும பண்டார, ரவி கருணாநாயக்க, ஜே.சி. அலவதுவல, மனோ கணேசன், பழனி திகாம்பரம், சுஜீவ சேனசிங்க, முஜிபுர் ரஹ்மான், காவிந்த ஜயவர்தன, எஸ்.எம். மரிக்கார், சுஜித் சஞ்சய, திலித் ஜயவீர, ஜகத் விதான உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டதோடு, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நிகழ்நிலை ஊடாக இச்சந்திப்பில் கலந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.