கோர விபத்தில் பாதசாரி ஒருவர் பலி!


கம்பஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுகம்பொல வீதியில், கெஹெல்பத்தர சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 


உடுகம்பொல பகுதியிலிருந்து கொட்டுகொட நோக்கிப் பயணித்த கார் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியின் இடது பக்கமாகச் சென்ற பாதசாரி ஒருவருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 


விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது. 


இவ்வாறு உயிரிழந்தவர் 38 வயதுடைய, உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 


உயிரிழந்தவரின் சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.