மாவீரர் பெற்றோர்களுக்கு முன்னால் நிற்க என்ன அருகதையுள்ளது.!


 ஒற்றையாட்சியை ஏற்றுள்ள தமிழரசு செயலாளருக்கு மாவீரர் பெற்றோர்களுக்கு முன்னால் நிற்க என்ன அருகதையுள்ளது.  


ஒற்றையாட்சியை ஆதரிக்கும் தனது துரோகத்தை மூடிமறைக்க மாவீரர் பெற்றொர்களை மதிப்பளிப்பது போன்று நாடகமாடும் சுமந்திரனை மாவீரர்கள் பெற்றோர் உரித்துடையோர் நிராகரிக்க வேண்டும். 


76 வருட இனஒடுக்குமுறைக்கு மூலவேராக இருந்தது பௌத்தம் அரசமதம் என்பதும் நாட்டின் ஆட்சி அதிகாரம் சிங்கள பௌத்த பெரும்பான்மையிடம் இருந்தமையுமே காரணமாகும். 

பெரும்பான்மையின சிங்கள பௌத்தர்களிடம் இருந்த ஓற்றையாட்சிக்கு எதிராகவே 50000 தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் ஆயுதம் ஏந்திப் போராடி மாவீரர்கள் ஆனார்கள். 

 

முள்ளிவாய்க்காலில் அழிவின் விளிம்பில் போராட்டம் நின்றபோதுகூட தமிழர்களது சுயாட்சிக் கோரிக்கையை கைவிட்டு ஒற்றையாட்சிக்குள் 13ஆம் திருத்தத்தை தீர்வாக ஏற்கத் தயார் என்றால் போரை நிறுத்தி உங்களைகாப்பாற்ற முடியும் என்று இலங்கை அரசும் சர்வதேச சக்திகளும் பேரம் பேசியபோதும் ஒற்றையாட்சிக்குட்பட்ட தீர்வு எதனையும் ஒருபோதும் பரிசீலிக்க முடியாது என்றும் மாறாக தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட தீர்வு ஒன்றை மட்டுமே பரிசீலிக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்று போரிட்டு வீரகாவிமானவர்களே இந்த மாவீரர்கள். 


இந்த மாவீரர்களது தியாகங்களை விற்று 

வடக்கு கிழக்கு தாயக கோரிக்கையை தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை கோரிக்கைகளை கைவிடடு பௌத்தம் அரச மதம் என்பதனை ஏற்றுக் கொண்டு சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வலியுறுத்தும் ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை ஏற்றுக்கொள்ளத் தயார் என்று சனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவை மூன்று நாட்களுக்கு முன்னர் 

(19-11-2025) தாமாகவே தேடிச் சென்று ஒப்புதல் அளித்துவிட்டு வந்திருக்கும் சுமத்திரனுக்கு மாவீரர் பெற்றோர்களுக்கு முன்னால் நின்று கருத்துச் சொல்ல என்னஅருகதை இருக்கிறது.


மாவீரர்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் ஏக்கிய இராச்சியவை ஏற்றுக் கொள்ள தமிழரசுக் கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திய சுமந்திரனை மாவீரர்களது பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வுக்கு அழைத்தவர்கள் யார் அவர்களது பின்னணி என்ன.


மாவீரரகள்து அம்மா அப்பாக்களே உடன்பிறந்தவர்களே தயவு செய்து இவரது துரோகத்திற்கு இடமளியாதீர்கள். 


ஒற்றையாட்சி அரசியல் யாப்பு பாராளுமன்றில் தமிழரசுக் கட்சியினால் ஆதரிக்கப்படும் நாளே மாவீரர்கள் என்ற வார்த்தை உச்சரிக்கப்படும் இறுதி நாளாக இருக்கும். அன்றிலிருந்து ஒற்றையாட்சிக்கு எதிராக போராடிய மாவீர்களை பயங்கரவாதிகளாகவும் அவர்களை பெற்றெடுத்த பெற்றோர்களை துஸ்டர்களது பெற்றோர்களாகவும் மறுவளமாக ஒற்றையாட்சியை காக்க போராடிய சிங்கள பௌத்த இனவாத இராணுவத்தை தேசபக்கதர்களாகவும் சுமந்திரன் போற்றித் துதிக்கும் நாளாகவும் அந்த நாள் அமையும். 


உங்களது பிள்ளைகள் எந்த ஒற்iறாட்சியை ஏற்க மறுத்து முள்ளிவாய்க்கால் வரை மண்டியிடாது போராடி உயிர் கொடுத்தார்களோ 

அதே ஒற்றையாட்சினை ஏற்றுக் கொள்வதாக ஒப்புதல் கொடுத்து உங்களது பிள்ளைகளது தியாகங்களை விற்றுவிட்டு உங்கள் முன்னால் வந்திருக்கிறார் சுமந்திரன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.