நல்லூரில் தமிழீழ விடுதலைப் புகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாட்டம்!📸
தமிழீழ விடுதலைப் புகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த தினம்: நல்லூரில் பொதுமக்களுக்குப் பொங்கல், மரக்கன்றுகள் விநியோகம்!
தமிழீ*ழ விடுதலைப் பு*களின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் 71 ஆவது பிறந்த தினம் இன்று (நவம்பர் 26) யாழ்ப்பாணம் நல்லூரில் அனுசரிக்கப்பட்டது.
தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள நினைவிடத்தில் இதற்கான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதன் போது, உணர்வுபூர்வமான சூழலில் பொங்கல் பொங்கப்பட்டு அங்கிருந்த பொதுமக்களுக்குப் பரிமாறப்பட்டது.
அத்துடன், இந்நிகழ்வில் கேக், இனிப்பு வகைகள் மற்றும் மரக் கன்றுகள் உள்ளிட்டவையும் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.






.jpeg
)





கருத்துகள் இல்லை