கர்வத்துடன் எழுந்து நிற்கிறது தமிழினம்.!
இன அழிப்பு அரசு வருசம் 364 நாட்கள் முக்கித் தக்கி இந்த இனத்தை அடிமைப்படுத்தி விடலாம் என்று ஏதேதோ தகிடுதத்தங்கள் செய்து அதில் கணிசமான வெற்றிகளையும் குவித்து மிதப்பில் இருக்கும் போது அந்த எஞ்சிய ஒரே நாளில் வரலாற்றையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டு கர்வத்துடன் எழுந்து நிற்கிறது தமிழினம்.
எதிரிகளால் இதைப் புரியவே முடியவில்லை - கூடவே பெரும் மனச் சோர்வுக்குள் போய் தோல்வி உளவியலில் சிக்கித் தவிக்கிறார்கள்.
அவர்களால் தடுக்க முடியாதென்றில்லை. தடுத்தால் மறுபேச்சுக்கிடமின்றி அடி விழும். அதற்கு இன அழிப்பு அரசு தயாராக இல்லை.
இந்தியப் படைகளுடன் யுத்தம் ஆரம்பித்த நாட்களில் சக தளபதிகள் 'வல்லரசு ஒன்றுடன் மோதி வெல்ல முடியுமா?' என்று தயங்கியபோது அதற்குத் தலைவர் 'அப்படியானால் சரண்டைய வேண்டும் அதற்காக இந்தப் போராட்டம் தொடங்கப் படவில்லை. அதைவிடப் போராடி வீழ்ந்தாலும் அடுத்த தலைமுறையிடம் ஒரு சரியான வரலாற்றை விட்டுச் செல்லலாம். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஒரு வேளை எதிரி தவறிழைத்து புவிசார் அரசியலும் எமக்குச் சார்பாகத் திரும்பினால் நாம் வெல்லவும் கூடும். எதிரியை நீண்ட போரிற்குள் இழுத்துச் செல்வதனூடாக அவனைக் களைப்படையச் செய்து பின் வாங்கச் செய்ய முடியும்' என்றார்.
பின்பு நடந்தது நாம் எல்லோரும் அறிந்த வரலாறு.
நந்திக்கடலில் வைத்து அவர் சொன்னதும் இதுதான். எதிரியை இழுத்துச் சென்று பொருண்மிய ரீதியாகக் களைபடையச் செய்தார். அதன் விளைவு திவாலாகியது இன அழிப்பு அரசு.
இன்று வரை அதை அறுவடை செய்து கொண்டிருக்கிறது இன அழிப்பு அரசு.
இப்போது பந்து மக்களிடம். அவர்கள் தம் பங்கிற்கு மாவீரர்களை உக்கிரமாக நினைவு கூர்வதனூடாக எதிரியைக் 'களைப்படையச்' செய்கிறார்கள். வருடங்கள் நகர நகர அது உக்கிரமடைகிறதே ஒழிய நீர்த்துப் போவது போல் தெரியவில்லை.
இன்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
தலைவர் உருவாக்கிய 'பொருண்மிய நெருக்கடி' பிச்சுப் புடுங்க , மாவீரரை நினைவேந்தும் மக்களின் மூர்க்கமான மன நிலையையும்/ உக்கிரத்தையும் தாங்காமல் இன அழிப்பு அரசு தமிழர் தாயகத்தை விட்டுவெளியேறுவது திண்ணம். 🔥
" பி ர பா க ர ன் இன்று யோசிப்பதை அவரது எதிரிகள் பல தசாப்தங்கள் கடந்துதான் புரிந்து கொள்வார்கள்' - அனிதா பிரதாப்
இதற்கு நாம் ஒரு பெயர் சூட்டியுள்ளோம் - 'நந்திக்கடல் கணிதம்' 🔴🟡

.jpeg
)





கருத்துகள் இல்லை