துப்பாக்கிச் சூட்டின் சந்தேக நபர்கள் மூவர் யாழில் கைது!


கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட மூவர் இன்று மாலை யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர்.


கொழும்பில் கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்றைய தினம் காரில் வந்தவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த அதேநேரம் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர்களிலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். 


இதன்போது துப்பாக்கிச் சூட்டை நடாத்திய இரண்டாவது நபர் மற்றும்  இக் கொலைக்கு திட்டமிட்டோர் யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவிற்கு தப்பிச் செல்லக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸார் உசார்படுத்தப்பட்டனர்.


பொலிஸார் சந்தேகித்தமைபோன்று கொழும்பில் நேற்றைய தினம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சந்தேக நபர்கள் மூவரும் ஓர் காரில் யாழ்ப்பாணம் வந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் தமிழர் எனவும் ஒருவர் இளம் பெண் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.