வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகள் ஜெய்சங்கரை சந்திப்பு!

 


இன்று பிற்பகல. 3.15 மணியளவில் இந்திய வெளிவிவகார அமைச்சர் திரு ஜெய்சங்கர்் அவர்களுக்கும் வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. 

இச்சந்திப்பில் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆம் திருத்தம் ஒருபோதும் தமிழ்மக்களுக்கு தீர்வாக அமையப்போவதில்லை. எனவே ஒற்றையாட்சி முறைமை நீக்கப்பட்டு சமஸ்டி அரசியல் யாப்பு ஒன்று உருவாக்கப்படல் வேண்டும் என்ற கருத்தினை தமிழ்த் தேசிய பேரவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் இச்சந்திப்பில் கலந்துகொண்ட நான் மாத்திரம் வலியுறுத்தினேன். ஏனையவர்கள் 13 ஆம் திருத்தம்பற்றி மாத்திரமே மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர். 


கடற்தொழிலாளர்களது பிரச்சினை தீர்க்க இந்திய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விடயத்தையும் 

பலாலி ஓடுதளம் தற்போதுள்ள நிலையில் பனரமைக்கப்படுவதற்கு மேலதிக காணிகள் பெறவேண்டிய அவசியம் இல்லை. எனவே அதனை உடனடியாக புனரமைக்க வேண்டும் என்றும் அனைவரும் வலியுறுத்தினோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.