மூடிய அறைக்குள் தமிழினத்தைக் காட்டிக் கொடுத்த ஈனத் தலைமைகள்!📸


இந்திய வெளிவிவகார அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கும் தமிழ்க் கட்சிகளுக்குமிடையிலான சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது.



இச்சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் #கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மட்டுமே #சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்தார்!


கேவலம் #தமிழரசுக் கட்சியும் #ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் 13ஆம் திருத்தத்தையும் மாகாணசபைத் தேர்தலையுமே வலியுறுத்தினர்! சமஷ்டி பற்றி வாயே திறக்கவில்லை. #சுமந்திரன் அவர்கள் மட்டுமல்ல, #சிறீதரன் அவர்கள் கூட சமஷ்டி கேட்கவில்லை.





தமிழரசுக் கட்சியின் தலைவரான சீ.வி.கே. #சிவஞானம் அவர்கள் ஒருபடி மேலே சென்று “13ஆம் திருத்தம் இந்தியா பெற்றெடுத்த பிள்ளை. அது எங்களுக்கு வேண்டும்” என்று ஒற்றைக்காலில் நின்றார்.


இனத்துக்கானவர்கள் யார்?

இனத்தைக் காட்டிக் கொடுப்பவர்கள் யார்?


எம்மவர்களே எம்மை அழிக்கின்றார்கள்!


மக்களே #சிந்தியுங்கள்!


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் கஜேந்திரகுமாரையும் பலப்படுத்தத் தவறின் விரைவில் தமிழரின் சரித்திரம் முடியும்!


நான் எழுதியது அத்தனையும் சத்தியம்! 

தவறென்றால் எனக்கெதிராகத் தாராளமாக வழக்குத் தாக்கல் செய்யுங்கள் #ஈனத் #தலைமைகளே!


க. சுகாஷ்,

பேச்சாளர்,

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.