2026 வரலாறு திரும்புகிறது. அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்போம்!

 


மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் தனது தேர்தல் கூட்டணி குறித்து விஜய் மறைமுகமாக பேசினார்.


“என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா, நண்பிகளுக்கு வணக்கம். நான் சினிமாவுக்கு வரும்போது எதிர்கொள்ளாத விமர்சனங்கள் இல்லை. நான் எதிர்கொள்ளாத அவமானங்கள் இல்லை. நிறைய காயங்களை தாண்டிதான் வந்திருக்கிறேன். 


எனக்கு ஒன்று என்றால் தியேட்டரில் வந்து நிற்கிறார்கள். நாளைக்கு அவர்களுக்கு ஒன்று என்றால் நான் அவர்கள் வீட்டில் போய் நிற்க விருப்பப்படுகிறேன். எனக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கும் ரசிகர்களுக்காக நான் சினிமாவையே விட்டுக் கொடுக்கிறேன். இந்த விஜய் சும்மா நன்றி என்று சொல்லிவிட்டு போகக் கூடியவன் கிடையாது. நன்றிக் கடனை தீர்த்துவிட்டுச் செல்பவன்.


நமக்கு நண்பர்கள் இருக்கிறார்களோ இல்லையோ வலுவான எதிரிகள் இருக்க வேண்டும். சும்மா வருபவர்களை எல்லாம் எதிர்த்துக் கொண்டிருக்க முடியாது, இல்லையா? வலுவாக இருப்பவர்களைதானே எதிர்க்க முடியும். அப்போதுதானே நாம் ஜெயிக்கும் அளவுக்கு வலுவாக இருக்கிறோம் என்று அர்த்தம். சமீபமாக நம்மைப் பற்றி ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் தனியாக வருவாரா, அணியாக வருவாரா என்று. நாம் எப்போது தனியாக இருந்திருக்கிறோம்.


 எல்லாவற்றையும் விட முக்கியம். செய்வதைத்தான் சொல்ல வேண்டும். எனவே 2026 வரலாறு திரும்புகிறது. அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்போம்” இவ்வாறு விஜய் பேசினார்.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.