அவளுடைய சிரிப்புக்கும், அழுகைக்கும்!!
அவள்
அவளாக இருப்பதற்கான
பிரயத்தனங்களில்
தோற்றுக்கொண்டே
இருக்கிறாள்.
சிறு புன்னகை
உதிர்ப்பதும்
அனுசரணையாக
நடப்பதும்
அன்பு காட்டுவதும் கூட
அவளுக்கு
இயலாதது தான்.
அவளுடைய சிரிப்புக்கும்
அவளுடைய அழுகைக்கும்
யார் யாரோ
அர்த்தம் சொல்கிறார்கள்.
காலத்தின்
கசங்கலில்
சிக்கிப்போன அவளுக்கு
இதய இழைகள்
உருகிக்கசிகிறது..
மாயக்கண்ணாடிகளின்
விம்பங்களில்
மகிழ்ந்திருக்க
அவள்
ஒருபோதும்
விரும்புவதே இல்லை.
சலசலக்கிற
அன்பின்
சல்லாபங்களில்
சிக்கிக்கொள்ளாத அவளை,
ஆணவக்காரி
என்றும்
அடங்காப்பிடாரி என்றும்
இந்த உலகம்
பெயரிடுகிறது.
வண்ணத்துப் பூச்சியைப்
போலல்லாது
வல்லூறைப் போல
பிரகாசிப்பதையே
அவள் தன்னிலக்காக
கொண்டிருக்கிறாள்,
அவளை
அவளாக
இருக்க விடுங்கள்,
போற்றாவிட்டாலும் பரவாயில்லை,
தூற்றாதிருங்கள்...
அவளுடைய வானமும்
வண்ணங்களால் நிறையும்...
✍️✍️கோபிகை✍️✍️
29.12.2025 💥யாழ்ப்பாணம்அ💥

.jpeg
)





கருத்துகள் இல்லை