தமிழ் அரசியல் களத்தில் இருந்து அர்ச்சுனாவைப் புறக்கணிப்போம்.!
தமிழ்த்தேசிய அரசியற் பரப்பில் செயற்படுகின்ற பல தமிழ் அரசியல்வாதிகள், பிற்போக்கு அரசியல் கருத்தாக்கங்களையும் செயற்பாடுகளையும், தமிழ் மக்கள் விரோத அரசியலை வெளிப்படுத்தியே வந்திருக்கின்றனர். அதனால் தமிழ் மக்களின் அரசியல் பலத்திற்கும் அரசியல் எதிர்பார்ப்புகளிற்கும் பாதிப்புக்களே ஏற்பட்டிருக்கின்றன.
இவற்றுக்குக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல அத்தனை அரசியல் அழுக்குகளின் மொத்தவடிவமாக இன்றைய அரசியற் களத்தில் செயற்பாட்டுக் கொண்டிருக்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா. சாதிய பிற்போக்குத்தனம் தொனிக்கும் பேசுக்கள், ஏனைய தேசிய இனங்களை அவமதிக்கும் செயற்பாடுகள், பெண்களைக் கொச்சைப்படுத்தும் பேசுக்கள், பெண்ணடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் செயற்பாடுகள், பிரதேசவாதம், குறைந்த பட்ச அரசியல் நாகரீகமும் இல்லாத ஆபாச பேச்சுக்கள், பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் மக்கள் போராட்டங்களுக்கு எதிராக நின்று அவற்றை கொச்சைப்படுத்தல், பேரினவாதிகளோடு குலாவுதல், எதிர்க் கேள்வி கேட்கும் அத்தனை பேரையும் அவர்களது குடும்பத்தாரையும் இழிவுபடுத்துதல் என மிகக் கேவலமான அரசியல் முகமாக களத்தில் இருக்கிறார். இவற்றை அரசியல் பேசும் இளையோராகிய நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இதனால் தமிழ் மக்களது அரசியற் செயற்பாடுகளில் பெரும் பாதிப்புக்களே ஏற்படும் என்பது திண்ணம். இழைக்கப்பட்ட பல்வேறு அநீதிகளுக்கான நீதியைக் கோரி நிற்கும் ஒரு சமூகம் தமது அரசியற் பிழைகளை சரி செய்து கொள்ளவேண்டியது கட்டாயம். அந்த வகையில் இந்த நபரை அரசியல் தரப்பிலிருந்து புறக்கணிக்க வேண்டிய தேவை எமக்கிருக்கிறது. அதற்காக பின்வருவனவற்றை செய்ய தமிழ் பேசும் சமூகத்திற்கும் ஊடக நண்பர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
1. அர்ச்சுனாவிற்கு புலம்பெயர் தேசத்திலிருந்து நிதியளிப்பததை நிறுத்துங்கள்.
2. அர்ச்சுனாவின் ஆபாச பேச்சுக்களை பரப்புவதை நிறுத்துங்கள்.
3. அர்ச்சுனாவை தமிழ் தலைவர்களுள் ஒருவராக சுட்டுவதை நிறுத்துங்கள்.
4. அர்ச்சுனா பற்றிய செய்திகளை பகிர்வதை நிறுத்துங்கள்.
தமிழ் அரசியல் களத்தில் இருந்து அர்ச்சுனாவைப் புறக்கணிப்போம்.
- அரசியல் பேசும் இளையோர் -
#Copy

.jpeg
)





கருத்துகள் இல்லை