ஜேர்மனியில் வாழ விருப்பமில்லை-யாழ் இளைஞர் விபரீத முடிவால் உயிரிழப்பு !
யாழ் ஊரேழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன் ஜேர்மனி சென்று அங்கு அகதி என பதிவு செய்தார். அதன் பின்னர் ஜேர்மன் அதிகாரிகள் அவரை அகதி முகாமில் தாங்கவைத்தனர்.
விசா இன்மை, வேலை இன்மை, தனிமை, மொழிப் பிரச்சனை நண்பர்கள் இன்மை போன்ற காரணங்களினால் இளைஞர் மனவிரக்திக்குள்ளாகி அடிக்கடி குடும்பத்தினருக்கு தான் மீண்டும் ஊருக்கு வர போகின்றேன் என்று கூறி வந்ததாக கூறப்படுகின்றது
குடும்பத்தினரும் போன காசை உழைத்துக்கொண்டு வா என்று ஆறுதல் கூறியும் இளைஞர் மனவிரக்ததிக்கு சென்று இன்று செவ்வாய் அதிகாலை 2:30 முகாமில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் ஊரெழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த புஸ்பராசா சுகன் வயது 25 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்
சடலம் உடற்கூற்று சோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரனைகளை அவ் பிரதேச பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை