அமெரிக்க விசா தொடர்பில் முக்கிய தகவல்!!
அமெரிக்காவின் எச்-1பி (H-1B) மற்றும் எச்-4 (H-4) விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் அனைத்துத் தரப்பினரின் இணையதள செயல்பாடுகளை ஆய்வு செய்யும் நடைமுறையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உலகளவில் விரிவுபடுத்தியுள்ளது.
இந்த புதிய நடைமுறை டிசம்பர் 15 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், விண்ணப்பதாரர்களின் தேசியம் எதுவாக இருந்தாலும் இது பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விசா பரிசீலனை செயல்முறையின் ஒரு அங்கமாக, விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிட்டுள்ள தகவல்கள் இதன்மூலம் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்படும்
விசா பரிசீலனை செயல்முறையின் ஒரு அங்கமாக, விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிட்டுள்ள தகவல்கள் இதன்மூலம் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
சமூக ஊடக நடவடிக்கைகள், பொதுவெளியில் பதிவிடப்பட்ட கருத்துக்கள், பகிரப்பட்ட உள்ளடக்கங்கள் மற்றும் ஏனைய இணைய அடையாளங்கள் இதில் ஆய்வு செய்யப்படும். விண்ணப்பம் செய்தவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், தகுதியை மதிப்பிடவும், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அல்லது மோசடிகளை கண்டறியவும் இந்த நடைமுறை முன்னெடுக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
குறிப்பாக, எச்-1பி வேலைவாய்ப்புத் திட்டத்தில் இடம்பெறக்கூடிய முறைகேடுகளைக் குறைத்து, அதேநேரம் அமெரிக்க நிறுவனங்களுக்குத் தேவையான உயர் திறன் கொண்ட வெளிநாட்டு ஊழியர்களைத் தொடர்ந்து பணியமர்த்த இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.jpeg
)





கருத்துகள் இல்லை