சொகுசு வீட்டில் மோசடி கும்பல்!!

 


அளுத்கம பகுதியில் உள்ள சொகுசு வீடு ஒன்றில் இருந்து இணைய மோசடியில் ஈடுபட்ட சீன நாட்டவர்களின் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

அளுத்கம பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேகத்திற்குரிய சீன நாட்டவர்களிடம் இருந்து 20 ஆப்பிள் கையடக்க தொலைபேசிகள், 50 சிம் அட்டைகள், மடிக்கணினிகள் மற்றும் பல பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சந்தேக நபர்கள் நீண்ட காலமாக வீட்டை வாடகைக்கு எடுத்தல், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஒன்லைனில் பணம் மோசடி செய்து பணம் பெறுதல் மற்றும் மக்களை ஏமாற்றுதல் உள்ளிட்ட பல கணினி குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய சீன நாட்டினர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த அதிகாரி சஜீவ மேதவத்தவின் அறிவுறுத்தலின் பேரில் அளுத்கம பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.