கனடாவில் கடும் குளிர்!!
50 ஆண்டுகளுக்குப் பின்னர் கனடா உறையவைக்கும் கடும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது வட அமெரிக்க கண்டம் இருவேறு தீவிர வானிலை நிலைகளை எதிர்கொண்டு வருகிறது.
ஒருபுறம் கனடா உறையவைக்கும் கடும் குளிரிலும், மறுபுறம் அமெரிக்காவின் பல பகுதிகள் வசந்த காலத்தைப் போன்ற வெப்பத்திலும் காணப்படுகின்றன. வடக்கு கனடாவில் கடந்த சில வாரங்களாக வெப்பநிலை -20°C முதல் -40°C வரை நீடித்து வருகிறது.
அடுத்த வாரத்தில், கனடாவில் நிலை கொண்டுள்ள குளிர் காற்று மெல்ல வடக்கு நோக்கி நகரத் தொடங்கும். இதனால் பசிபிக் பெருங்கடலில் இருந்து வீசும் மிதமான காற்று அமெரிக்கா மற்றும் தெற்கு கனடா பகுதிகளுக்குள் நுழையும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை