கனடாவின் அதிரடி முடிவு!!
இணையத்தின் மூலம் இளைஞர்கள் தீவிரவாத நோக்கத்தில் ஈர்க்கப்படுவதை தடுக்க, நான்கு புதிய அமைப்புகளை குற்றச்சாட்டுச் சட்டத்தின் (Criminal Code) கீழ் தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்த்துள்ளது கனடா.
தீவிரவாதம் மற்றும் வன்முறையைக் கட்டுப்படுத்த கனடா அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில்,
பொது பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி கீழ்க்கண்ட அமைப்புகளை பட்டியலில் சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளார்.
764, Maniac Murder Cult, Terrorgram Collective, மற்றும் இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் அண்ட் சிரியா (ISIS/Daesh) உடன் தொடர்புடைய Islamic State–Mozambique என்ற அமைப்புகளாகும்.
கனடாவின் குற்றச்சாட்டுச் சட்டத்தின் கீழ், இப்போது இந்த அமைப்புகள் “தீவிரவாத அமைப்புகள்” என சட்டபூர்வமாக வரையறுக்கப்படுகின்றன.
இதன் மூலம் கனடிய பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்க அமைப்புகள் தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுக்கவும் தடை செய்யவும் வலுவான கருவிகளைப் பெறுகின்றன.
இந்த நடவடிக்கைகள் கனேடியர்களையும் சமூகங்களையும் மிரட்டல், வெறுப்பு, வன்முறை மற்றும் தீவிரவாதச் செயல்களில் இருந்து பாதுகாக்க உதவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

.jpeg
)





கருத்துகள் இல்லை