வளர்ப்பு நாயின் நெகிழ்ச்சி செயல்!!
டித்வா புயலை தொடந்து மாத்தளையில் ஏற்பட்ட மண்சரிவில் மண்ணுக்குள் புதையுண்டிருந்த 7 பேரின் சடலங்களைத் தேடுவது மிகவும் கடினமாக இருந்த
தருணத்தில், அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட நாய், மண்ணுக்குள் புதையுண்டிருந்த வீட்டார்களைக் கண்டுபிடித்துக் கொடுத்த சம்பவம் அனைவரின் மனதையும் உலுக்கியது
மாத்தளை, பல்லேபொல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அம்பொக்க கிராமத்தின் மலைத்தொடர் தற்போது மண்சரிவு அபாய நிலையில் காணப்படுகிறது.
பெய்த கடும் மழையினால் இந்த அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உடனடியாகக் கவனம் செலுத்தி, மக்களுக்குத் தெளிவுபடுத்துமாறு கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த நாட்களில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது, மலையொன்று சரிந்து விழுந்ததில் கிராமத்திலுள்ள வீடொன்றில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர்
உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்ட போதிலும், அப்பகுதி இன்னும் மண்ணால் முழுமையாக மூடப்பட்டுள்ளது எனத்தெரிவிக்கப்படுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை