7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!


ஜப்பானின் வடக்கு பகுதியில் 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து பொது மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு ஜப்பானில் உள்ள அமோரி மற்றும் ஹொக்கைடோ பகுதிகளில் நிலநடுக்கம் கண்டறியப்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு கடற்கரையை மூன்று மீட்டர் உயர அலைகள் தாக்கக்கூடும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, இந்த நிலநடுக்கம் 7.6 ரிக்டர் அளவிலானது. அந்த அளவு வலிமையானது ஒரு அரிய நிகழ்வாகும்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.