தோல்வியில் முடிந்த காலி மாநகர சபை வரவுசெலவுத்திட்டம்!!
தேசிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து ஆட்சியமைத்த காலி மாநகர சபையின் பாதீடு இன்று இரண்டு மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்தது.
மொத்தமுள்ள 36 உறுப்பினர்களில், பாதீட்டுக்கு ஆதரவாக 17 வாக்குகளும், எதிராக 19 வாக்குகளும் கிடைத்தன.
இதில், தேசிய மக்கள் சக்தியின் 17 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்த போதிலும், சபையை அமைக்க ஆதரவு வழங்கிய இலங்கை பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பிரதி தலைவர் மற்றும் அந்த கட்சியின் மற்றுமொரு உறுப்பினர் ஆகியோர் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தமை இந்த தோல்விக்கான காரணமாக அமைந்துள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை