சிறுமியை கடத்தி துஷ்பிரயோகம்!!
உத்தரபிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் சில நாட்களுக்கு காணமல் போயுள்ளார். இது குறித்து அவரது தந்தை பொலிஸில் புகார் செய்தார்.
அதன்பேரில் பொலிஸார், சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட போது அப்போது அப்பகுதியை சேர்ந்த 21 வயதுடைய ஒருவர் சிறுமியை கடத்திச்சென்றதும், மராட்டியத்தின் மும்பை, புனே உள்ளிட்ட இடங்களுக்கு சிறுமியை கொண்டு சென்றதும் தெரியவந்தது.
சிறுமியை 25 நாட்களுக்கு மேலாக கடத்தி வைத்திருந்த குறித்த இளைஞன், தொடர்ந்து அவரை பலமுறை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
பின்னர் பொலிஸார் தேடுவதை அறிந்ததும் உத்தரபிரதேசத்துக்கு அழைத்து வந்துள்ளார் என மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதைத்தொடர்ந்து குறித்த இளைஞன் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை