தோல்வியுடன் விடை பெற்ற ஜோன் சீனா!!

 


அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி நகரில் நடைபெற்ற WWE 'Saturday Night's Main Event' நிகழ்ச்சி, WWE மல்யுத்த ரசிகர்களின் மனதில் மறக்க முடியாத தருணமாக அமைந்தது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட WWE சூப்பர் ஸ்டார் ஜோன் சீனா, தனது 20 ஆண்டுகளைக் கடந்த மல்யுத்த பயணத்தை இந்த போட்டியுடன் முடித்துக் கொண்டார்.

பிரபல WWE ரும் நடிகருமான ஜோன் சீனா, தன்னுடைய இறுதி போட்டியில் தோல்வியடைந்த நிலையில் ஓய்வு பெற்றுள்ளார்.

தனது கடைசி போட்டியில் குந்தரரை எதிர்கொண்ட ஜோன் சீனா Tap out முறையில் தோல்வியடைந்தார். போட்டி முடிந்ததும், WWE அறையில் இருந்த பல வீரர்கள் ரிங்கிற்குள் வந்து சீனாவை சூழ்ந்து கொண்டு அவருக்கு மரியாதை செலுத்தினர்.

அரங்கின் பெரிய திரையில் அவரது வாழ்க்கைப் பயணத்தின் முக்கிய தருணங்கள் ஒளிபரப்பப்பட்டன.

இறுதியாக, ஜோன் சீனா தனது பாதணிகளை ரிங்கில் வைத்து, கேமராவை நோக்கி வணக்கம் செலுத்தினார்.

இந்த பல ஆண்டுகள் என்னுடன் இருந்ததற்கு நன்றி. உங்களுக்குச் சேவை செய்தது பெருமை," என அவர் கூறியபோது, ரசிகர்கள் கண்ணீருடன் கைத் தட்டினர். அதனைத் தொடர்ந்து, சீனா மெதுவாக வெளியேறினார்.

அரங்கில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி ஜோன் சீனாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த நடை, WWE வரலாற்றில் ஒரு பொற்காலம் முடிவடைந்ததற்கான சாட்சியாக மாறியது.

ஜோன் சீனாவின் இந்த இறுதிப்போட்டி, ஒரு தலைமுறை WWE ரசிகர்களின் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும் எனலாம்.

மல்யுத்தம் தவிர ’தி சூசைட் ஸ்குவாட்’, ‘ஃப்ரீலான்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும், டிசி காமிக்ஸின் பிரபலமான ‘பீஸ்மேக்கர்’ வெப் தொடரில் பிரதான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.