காந்தா- இந்த வாரம் ஓடிடியில் அதிகாரபூர்வ அறிவிப்பு
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் ஒரு படம் வெளியாகிறது என்றால், கண்டிப்பாக அப்படம் அனைவரையும் திருப்திப்படுத்தும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
அந்த எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளிவந்த படம்தான் காந்தா. 1950களின் காலகட்டத்தை மையப்படுத்தி உருவான இப்படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கியிருந்தார்.ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்தநிலையில், காந்தா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காந்தா வருகிற 12ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

.jpeg)
.jpeg
)





கருத்துகள் இல்லை