இப்ப தெரியுதா? தமி/ழீழ முப்படைகளை கட்டி ஆண்ட தமிழினத்துக்கு முகவரி!


பயங்கரவாதிகளை அழித்தோம் கிழித்தோம் என்று பீத்துகின்ற ஊதுகுழல்களே…! 


முப்படைகளை கட்டி ஆண்டு தமிழினத்துக்கு முகவரியை உலகம் முழுக்க பதித்த எம் தலைவனின் நிழலரசினை அழித்ததாகவும் சிறீலங்காவின் வல்லாதி வல்லன், சூராதி சூரன், நவீன துட்டகாமினி அது இது என்று பீத்துகின்ற ஊதுகுழல்களே கொஞ்சம் நில்லுங்கப்பு… 


ஒரு இயற்கை அனர்த்தத்தையே கையாளத்தெரியாத இராணுவக்கட்டமைப்பை வைத்துக்கொண்டு, உலகம் முழுக்க இருந்து இராணுவ உதவிகளைப்பெற்றுக்கொண்டு நேபாளம், பங்களாதேசம் முதல் அமெரிக்கா வரை உதவிகளைப் பெற்றுக்கொண்டு ஒரு இயற்கை அனர்த்த முகாமையைச் செய்யும் இந்த சிங்கள வல்லாதிக்க அரசு விடுதலைப்புலிகளை தனித்து அழித்தது என்றால் நம்பக் கூடியதாகவா இருக்கிறது? 


ஊர் முழுவதையும் தாரை வார்த்து வார்த்து குடுத்துப்போட்டு  இராணுவ வளங்களை பெற்று எம் மீதான இனவழிப்பை செய்து முடித்தீர்கள் என்று ஏன் சொல்ல முடியேல்ல உங்களால? 


சுனாமி எங்கட தேசத்தை உலுப்பி விட்டுச்சென்ற பின், எந்த இராணுவ உதவிகளும் அற்று மீண்டும் எம் தேசத்தை நாமே கட்டியெழுப்பிய கதையை மறந்துவிடாதீர்கள்.  நிதி பங்களிப்பு பல்நாடுகளில் இருந்து வந்திருந்தாலும் இராணுவ பங்களிப்பை அவர் என்றும் எம் தமிழீழ நாட்டுக்குள் அனுமதித்ததில்லை. 


“மலேரியா” நீங்களே கட்டுப்படுத்த முடியாமல் திணிறிக்கொண்டிருந்த காலத்தில் ( இன்றும் கூட ) மலேரியாவை 0 நிலைக்குள் கட்டுக்குள் வைத்திருந்த தமிழீழ மருத்துவப்பிரிவை அறிவீர்களா நீங்கள்? அதற்கும் அவர் எந்த நாட்டின் இராணுவத்தையும் நாட்டுக்குள் கொண்டு வரவில்லை. 


“கொலறா” என்ற கொடிய நோய் பரவி பல பத்து மக்களின் உயிரை காவுகுடுத்த போது, அதைக் கட்டுப்படுத்தி மக்களின் சாவுகளை குறைத்து  வைத்திருந்த கதையை அறிவீர்களா? அதற்கும் அவர் எந்த இராணுவ உதவியையும் தமிழீழ நாட்டுக்குள் விட்டதில்லை. 


ஏன்? பத்துக்கு மேற்பட்ட நாடுகள் ஒன்றாக நின்று எம் தேசத்தின் விடுதலையை முடக்கிய போதும் கூட எம் நாட்டுக்குள் அவர் எந்த இராணுவத்தையும் அனுமதிக்கவில்லை. 


ஏனெனில், தமிழீழம் தமிழனுக்குரியது. அவனது பூர்வீக நாட்டினை தமது அரசியல் பொருளாதார இலாபங்களுக்காக பங்குபோட்டுக் கொள்ள துடிக்கும் உலக நாடுகளுக்கு பிரித்துக்கொடுத்துவிட்டு எம் மக்களை அடிமைகளாக்க அவர் என்றும் விரும்பியதில்லை. அதனால் தான் தன் மக்களுக்காக தன் தேசத்துக்காக அந்த தெய்வம் இறுதி வரை உறுதியாக தனித்து நின்று போராடியது. 


இப்ப புரியுதா? 


“நீங்கள் வேறு நாடையா நாங்கள் வேறு நாடு “


-ரத்னம் கவிமகன்-

09.12.2025

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.