அத்துப்படி -தீபிகா!!

 



முட்கம்பியில் தனித்திருந்து

வயல் பார்க்கிறது

ஒரு வண்ணத்துப்பூச்சி.


வெட்டியோடி கதிருக்குள் மறைகிற

பகல் முயலை

தலை நிமிர்த்தித் தொடர்கிறது 

மிதிவெடி மாடு. 


சுருக்கில் சிக்கிய உடும்பை 

சைக்கிளில் காவி வருகிறார் 

வேட்டைத் தாத்தா. 


இலை சொட்டும் பனியில் 

வலையதிர அசைகிறது 

வாழைச் சிலந்தி. 


குடத்தண்ணீரை மெண்டு குடிக்கும் 

காற்சங்கிலி மகளுக்கு 

இந்த உலகமெல்லாம் அத்துப்படி. 


கைநழுவிப் போய்விட்டது.


போர் விழுங்கி விட்ட

அப்பாவின் உலகம் தான்.


----- xxx -----


தீபிகா 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.