எம்.பியாகும் எண்ணத்தில் ரணில்!


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ், சிங்களப் புத்தாண்டின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணத்தில் இருப்பதாக கொழும்புன் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்திருந்த ரணில் விக்கிரமசிங்க, 2021ஆம் ஆண்டு மீண்டும் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க படுதோல்வியடைந்திருந்ததால் அரசியல் செயற்பாடுகளில் இருந்து சற்று ஒதுங்கியிருந்தார்.

ரணில் விக்கிரமசிங்க , ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பின்னர் மீண்டும் தீவிர அரசியலில் களமிறங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டின் பின்னர் நாடாளுமன்றத்துக்குச் செல்லும் எண்ணத்தில் காய்களை நகர்த்தி வருகின்றார் என்று எதிர்க்கட்சிகளின் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.