யாழ் மக்களின் கோரிக்கை!!


யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் பெய்து வரும் தொடர் கனமழையால் மருதங்கேணி - பருத்தித்துறை வீதி முற்றாக பாதிப்படைந்துள்ள நிலையில் அதனை சீரமைக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த வீதிகள் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பெருமளவு நிதியில் போடப்பட்டதாகவும் இன்று வரை தரமற்ற வீதியாகவே காணப்படுகின்றது.

இந்த வீதி புனரமைப்பின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொண்டு குறித்த வீதியை புனரமைப்பு செய்து தருமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனளிக்கவில்லை எனவும் பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.