இலங்கைக்கு மனிதாபிமான உதவி வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!!
இயற்கை பேரிடர் பாதிப்பிலிருந்து இலங்கை மீள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோ அவசர மனிதாபிமான உதவியை வழங்க தீர்மானித்துள்ளது.
இந்த உதவியானது "டிட்வா" (Ditwa) புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசிய நிவாரணங்களை வழங்க உதவும் என ஐரோப்பிய ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது..
இலங்கையில் தற்போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை (Red Crescent) குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளை ஆரம்பித்துள்ளன என்றும், அந்த அமைப்புகள் ஊடாக வழங்கப்படும் 5 இலட்சம் யூரோக்களும் இந்த மனிதாபிமான உதவித் தொகையில் உள்ளடங்குவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை