அனர்த்த உதவியில் இணைந்த முக்கிய நாடு!!
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரண உதவிகளை இஸ்ரேல் வழங்கியுள்ளது.
இந்த தருணத்தில் இலங்கையில் நடந்து வரும் தேசிய நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இஸ்ரேல் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த உதவி இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பை பிரதிபலிப்பதாக அந்த நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த கடினமான நேரத்தில் இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க இஸ்ரேல் தயாராக உள்ளதாகவும் அந்த அரசாங்கம் தெரிவித்துள்ளது

.jpeg
)





கருத்துகள் இல்லை