இலங்கை விமானியின் சமயோசித செயல்!!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட துருக்கி ஏர்லைன்ஸ் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்கவிலேயே அவசரமாகத் தரையிறங்க முயற்சித்து
தொழில்நுட்பக் கோளாறால் சிலாபத்திற்கு மேலே 2 மணி நேரம் சுற்றிய துருக்கிய ஏர்லைன்ஸ் கொழும்பு-இஸ்தான்புல் விமானம் TK733, பாதுகாப்பாக கொழும்பு விமான நிலையத்தில் இல் பாதுகாப்பாக தரையிறங்கியது.
விமானியின் சாமர்த்தியமான நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தின் எடையைக் குறைப்பதற்காக, சிலாபம் கடல் பகுதிக்கு மேலே விமானம் வட்டமடிக்கச் செய்யப்பட்டது.
விமானத்தில் இருந்த 202 பயணிகள் மற்றும் 10 பணிக்குழுவினர் என யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. தக்க நேரத்தில் செயல்பட்ட விமானியின் நிதானமும், தரைக் கட்டுப்பாட்டு அறையின் துரித நடவடிக்கையும் நூற்றுக்கணக்கான உயிர்களைப் பாதுகாத்துள்ளன.

.jpeg
)





கருத்துகள் இல்லை