இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை!!

 


இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாயன்று ஒரு நாள் விஜயமாக கொழும்பு வருகின்றார்.

இலங்கைத் தலைவர்களைச் சந்தித்துப் பேசும் அவர் கொழும்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்குக் கூட்டணி) ஆகிய தரப்பினரை ஒன்றாகச் சந்திக்கவிருக்கின்றார் எனத் தெரியவருகின்றது.

பேரிடரால் பெரிதும் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உடனடி அயல்நாடு என்ற முறையில் பெருமளவில் விரைந்தும், தொடர்ந்தும் இந்தியா உதவி வரும் பின்னணியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஒரு நாள் விஜயமாகக் கொழும்பு வருகின்றார்.

ஏற்கனவே கடந்த ஏப்ரலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு வந்திருந்த சமயம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நான்கு தலைவர்களையும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இரண்டு தலைவர்களையும் சேர்த்து ஒன்றாகச் சந்தித்திருந்தார்.

அந்தச் சந்திப்பின் தொடர்ச்சி இப்போது இந்திய வெளிவிவகார அமைச்சரின் கொழும்பு விஜயத்தின் போதும் தொடர்ந்து இடம்பெறும் எனத் தெரிகின்றது.

பிரதமர் மோடியைச் சந்தித்த தமிழரசுக் கட்சி பிரமுகர்களான கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் செவ்வாயன்று இந்திய வெளிவிவகார அமைச்சரைச் சந்திப்பார் என்று தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.