காதலென்கிறார்கள்...!


வழித்தெடுத்த

நேசத்தை

வாசனைத் திரவியமாக

தடவினேன்.

இக் கமத்தலைத்தான்,

இவர்கள்

காதலென்கிறார்கள்.

நான்

கசிந்துருகும்

உயிர்த்தலென்கிறேன்.

இங்குதான்

என்னுலகம்

வேறாகிப்போனது

பித்தனென

இவர்கள்

பிதற்றுவதற்கும்

பிறகென்னை

வெறுப்பதற்குமான

அந்நியப் போக்கில்.


- ரவி அல்லது, பட்டுக்கோட்டை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.