அர்த்தம் நிரம்பிய வாழ்க்கை!


என் பாதையின் நீளத்தை

அறியாமலிருப்பதே உத்தமம்.

அதன் நிலைகுறித்து

உன்னிடம் விவரித்தல்

சிரமமென்று நினைக்கிறேன்.

நீ புரிந்து கொள்வாய்

என் வலி உன் வலியாய்

மாறுவதில் எனக்குத் துளியும்

விருப்பமில்லை.

பேதம் பார்க்காமல் பழகியவர்கள்.

பித்தத்தில் ஆழ்த்தும்

நம் வலிகளை யாருக்கும்

பரிசளிக்க வேண்டாம்.

மனக்காயங்களை ஆற்றிட

அன்பை மயிலிறகு கொண்டு

வருடிக்கொள்வோம்.

வாழ்க்கை முத்தங்கள்

அர்த்தம் நிரம்பியது.

அதை வறியவர்க்கும் கொடுத்து

மகிழ்வோம்!


- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

From :- MUTHUKAMALAM

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.