இணைய மோசடி தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!!
சமூக ஊடகங்கள் வழியாக இணையம் மற்றும் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சைபர் குற்றவாளிகள் பண்டிகை காலத்தையும் சமீபத்திய அனர்த்த நிலைமைகளையும் பயன்படுத்தி அரச நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், முக்கிய சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நிவாரண அமைப்புகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து பணம் கோருகின்றனர்.
மோசடியான பதிவுகளில் தவறான விளம்பரங்கள், பரிசுகள் மற்றும் நன்கொடை கோரிக்கைகள் ஆகியவை அடங்கும்.இதன் காரணமாக சில வங்கிக் கணக்குகள் அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகப்படுகின்றன.
எனவே,சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைத் தவிர்ப்பதுடன், பாதுகாப்பான வழிகள் மூலம் மட்டுமே தனிப்பட்ட தகவல்களைப் பகிருமாறும், ஒரு முறை பயன்படுத்து கடவுச்சொற்களை ஒருபோதும் வெளியிட வேண்டாம் என்றும், பதிலளிப்பதற்கு முன் அனைத்து நன்கொடை கோரிக்கைகளையும் சரிபார்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

.jpeg
)





கருத்துகள் இல்லை