நாளை உலகம் அழியுமா!!
உலகமெங்கும் உள்ள மக்கள் நாளை கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் நிலையில் நாளை ராட்சச வெள்ளத்தின் மூலம் கடவுள் உலகத்தை முடிவுக்கு கொண்டு வரப் போகிறார் என தன்னைத்தானே தீர்க்கதரிசி என சொல்லிக் கொள்ளும் கானா நாட்டை சேர்ந்த எபோ நோவா (eboh noah)என்பவர் பகீர் தகவலை கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல நாடுகளிலும் அவ்வப்போது ஏற்பட்டும் இயற்கை பேரழிவுகள் சுனாமி, தீ பிடிப்பது, மழை வெள்ளத்தால் மக்கள் மடிவது, மண் சரிவு ஏற்பட்டு மக்கள் இறப்பது என பல இயற்கை பேரழிவுகளால் மக்கள் உயிரிழப்பு ஏற்படும்.
அவற்றில் இருந்து மக்களை பாதுகாக்கலாமே தவிர நடப்பதை தடுக்க முடியாது. அதேசமயம் இன்னமும் இயற்கை பேரழிவுகளை முழுதாக கணிக்கும் அளவுக்கு உலக விஞ்ஞானமும் முன்னேறவில்லை.
ஒருபக்கம் உலக பேரழிவுகளை கணிப்பதாக சில தீர்க்கதரிசிகளும் உலக நாடுகளில் இருக்கிறார்கள். பல்கேரிய தீர்க்கதரி பாவா வாங்கா கணிப்புக்கள் உலகளவில் அதிகம் மக்களால் நம்பப்படுகின்றது.
இந்த வருடம் சுனாமி வரும், இந்த வருடம் மழை வெள்ளத்தில் மக்கள் இறந்து போவார்கள், இந்த வருடம் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும், இந்த வருடம் ஒரு முக்கிய அரசியல் தலைவர் இறந்து போவார் என்றெல்லாம் அவர்கள் ஜோதிடம் சொல்வார்கள்.

.jpeg
)





கருத்துகள் இல்லை