ஒரு 'Certified mental ' நோயாளிக்கு அரசாங்கம் துப்பாக்கி வழங்கியது ஏன்?


சமீபகாலமாக சர்ச்சைகளின் நாயகனாக வலம் வரும் டாக்டர் அர்ச்சுனா குறித்து வெளியாகியுள்ள மருத்துவப் பரிந்துரைக் கடிதம், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


இந்த அறிக்கையை ஆழமாகப் பரிசோதிக்கும்போது, எத்தகைய ஆபத்தான ஒரு நபரிடம் இந்த அரசாங்கம் ஆயுதத்தைக் கொடுத்துள்ளது என்பது தெளிவாகிறது.


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மனநல ஆலோசகர் (Consultant Psychiatrist) டாக்டர் எஸ். சிவதாஸ் அவர்களால் எழுதப்பட்ட இந்தப் பரிந்துரைக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய விடயங்கள்,


ஒரு மனநல ஆலோசகர் (Psychiatrist) ஒருவரைப் பரிசோதித்து மேலதிக சிகிச்சைக்குப் பரிந்துரைக்கிறார் என்றாலே, சம்பந்தப்பட்ட நபர் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட உண்மை.


அர்ச்சுனாவுக்கு அடிக்கடி நெஞ்சு வலி (Chest pain) ஏற்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல நேரங்களில் கடுமையான மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தினால் (Psychosomatic symptoms) இத்தகைய வலிகள் ஏற்படுவது வழக்கம்.


இதய நோய் நிபுணரின் அறிக்கையில், ஆரம்பக்கட்ட முடிவுகள் சீராக இருந்தாலும், அவர் ETT (Exercise Tolerance Test) போன்ற மேலதிக பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


ஒரு மனநல மருத்துவரால் 'நோயாளி' என அடையாளப்படுத்தப்பட்ட, மனநிலைச் சமநிலையற்ற ஒருவருக்கு, 16 தோட்டாக்களுடன் கூடிய கைத்துப்பாக்கியை வழங்கியது ஆக்க்கூடிய வடிகட்டிய தற்குறித்தனம் என்றால் மிகையாகாது. 


மன அழுத்தத்தில் இருக்கும் ஒரு நபர், ஒரு சிறிய தூண்டுதலில் (Trigger) தன்னையோ அல்லது தன்னைச் சுற்றியிருப்பவர்களையோ சுட வாய்ப்புள்ளது. ஒரு 'Certified' மனநோயாளிக்கு ஆயுதம் வழங்குவது என்பது பொதுமக்களின் தலையில் நெருப்பை வைப்பதற்குச் சமம்.


ஒருவருக்கு ஆயுதம் வழங்கும் முன் அவரது குற்றப் பின்னணி மற்றும் மனநிலை (Medical Clearance) ஆகியவை ஆராயப்பட வேண்டும். ஆனால், அர்ச்சுனாவின் விஷயத்தில் இந்த அரசாங்கம் அப்பட்டமான தற்குறித்தனத்தையே வெளிப்படுத்தியுள்ளது.


எந்நேரம் என்ன செய்வார் என்று தெரியாத ஒருவரிடம் அதிகாரத்தையும் ஆயுதத்தையும் கொடுத்து வேடிக்கை பார்க்கும் ஓர் அரசிடம் எமது மக்கள் சிக்கியுள்ளார்களே என்ற ஆதங்கமே இன்று மேலோங்கியுள்ளது.


இந்த மருத்துவ அறிக்கை அர்ச்சுனாவின் தற்போதைய உளநிலையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. விபரீதங்கள் நிகழும் முன், இந்தத் தவறை உணர்ந்து, அவரிடமுள்ள ஆயுதத்தை அரசு உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும். ஒரு தனிநபரின் விபரீதச் செயலுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகக் கூடாது என்பதே அனைவரது கோரிக்கையாகும்.


இதோ அந்த மருத்துவ அறிக்கையின் தெளிவான விளக்கம்


மருத்துவப் பரிந்துரைக் கடிதம் (Medical Referral Letter)

அனுப்புநர்:

டாக்டர் எஸ். சிவதாஸ் (Dr. S. Sivathas)

மனநல ஆலோசகர் (Consultant Psychiatrist)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை (Teaching Hospital, Jaffna)

தேதி: 02.10.2024


பெறுநர்:

டாக்டர் லக்ஷ்மன் (Dr. Lakshman)

இதய நோய் நிபுணர் (Consultant Cardiologist)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை


பொருள்: நோயாளி டாக்டர் ஆர். அர்ச்சுனா (38 வயது) 


குறித்த மருத்துவப் பரிந்துரை

மதிப்பிற்குரிய சக மருத்துவருக்கு (Dear Colleague),

இந்தக் கடிதத்தின் மூலம் நோயாளி டாக்டர் ஆர். அர்ச்சுனா (வயது 38) என்பவரை மேலதிக இதயப் பரிசோதனைக்காக உங்களிடம் பரிந்துரைக்கிறேன். இவருக்கு அவ்வப்போது நெஞ்சு வலி (Chest pain) ஏற்படுவதாகக் கூறுகிறார்.


இவருடைய தற்போதைய ECG முடிவுகள் கைவசம் உள்ளன. அவற்றில் தீவிர இஸ்கிமிக் பாதிப்புகள் (Acute ischemic conditions) ஏதும் தென்படவில்லை. இருப்பினும், இவருடைய உடல்நிலையைக் கருத்திற்கொண்டு தேவையான பரிசோதனைகளைச் செய்து உரிய சிகிச்சையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


மிக்க நன்றிகளுடன்,

(கையொப்பம்)

டாக்டர் எஸ். சிவதாஸ்

மனநல ஆலோசகர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை.


பதிலுக்கு நன்றி தெரிவிக்கும் குறிப்பு (Reply from Cardiologist):

தேதி: 03.10.2024

அன்புள்ள டாக்டர் சிவதாஸ் அவர்களுக்கு,

உங்கள் மருத்துவப் பரிந்துரைக்கு நன்றி. டாக்டர் ஆர். அர்ச்சுனாவை நான் பரிசோதித்தேன்.


பரிசோதனை முடிவுகள்:


• ECG: SR - 75 bpm

• இரத்த அழுத்தம் (BP): 110/70 mmHg

• 2D Echo: NO LVH (இடது வென்ட்ரிக்குலர் ஹைபர்டிராபி இல்லை)

• LVEF: 72%

இவருடைய இதயம் தற்சமயம் சீராக இயங்குகிறது. மேலதிக உறுதிப்படுத்தலுக்காக ETT (Exercise Tolerance Test) பரிசோதனைக்குப் பின்னர் இவரை மீண்டும் நான் ஆய்வு செய்வேன்.

நன்றிகளுடன்,

(கையொப்பம்)

டாக்டர் பி. லக்ஷ்மன்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.